Saturday, 19 January 2013
16 செல்வங்கள்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்பார்கள்.
"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?
இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்
,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி.
இதுவே பதினாறு செல்வங்களாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment